வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு…5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்யலாம்

டில்லி:

வதந்தி பரவுவதை தடுக்க ஒரு மெசேஜை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்யும் வகையில் புதிய கட் டுப்பாடுகளை வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கொண்டு வர உள்ளது.

வாட்ஸ் அப் மூலம் வேகமாக பரவும் வதந்தியால் இந்தியாவில் இது வரை 25க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் கும்பலாக சேர்ந்து மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அதனால் வாட்ஸ் அப் பரவும் வதந்திகளை தடுக்க அந்நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் ஒரு மெசேஜை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும். போட்டோ, வீடியோ என எந்த வகையிலான தகவலாக இருந்தாலும் 5 முறை மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும். 5 முறை பார்வேர்டு செய்துவிட்டால் அந்த குறிப்பிட்ட மெசேஜில் பார்வேர்டு செய்யப்படும் வசதி நிறுத்தப்பட் டுவிடும். பல ஆய்வுகளுக்கு பின் இந்த தொழில்நுட்ப வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே ஒரு அப்டேட் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பார்வேர்டு மெசேஜ்களை காட்டிக் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்டு மெசேஜ் என்ற லேபிள் இடம்பெறும். பார்வேடு மெசேஜ் அனுப்பினால் இது காட்டிக் கொடுத்துவிடும்.

வாட்ஸ் அப்பில் நமக்கு பொய்யான ஒரு லிங்கோ, இல்லை வைரஸ் நிறைந்த லிங்கோ வந்தால், அதை காட்டிக் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. ஒரு பொய்யான லிங்கை கிளிக் செய்யும் முன், அது குறித்து ஒரு எச்சரிக்கை தகவல் வாட்ஸ் அப் காட்டும்.