இந்தியாவில் குறைதீர் அதிகாரியை வாட்ஸ் அப் நியமிக்க வேண்டும்….மத்திய அரசு

டில்லி:

இந்தியாவில் குறைதீர் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாட்ஸ் அப் சிஇஒ கிறிஸ் டேனியல்ஸூடன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘போலி செய்திகள் பரவுவதை தடுக்க உள்ளூர் நிறுவனங்களை வாட்ஸ் அப் நிறுவனம் தொடங்க வேண்டும். கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்துவது, பிரபலங்களில் ஆபாச படங்கள் பரவுவதால் போன்ற குற்ற செயல்கள் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தை மீறும் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாட்ஸ் அப் குறைதீர் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இந்திய சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். பிரச்னைகளுக்கு அமெரிக்காவில் இருந்து பதில் பெறக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. தவறான தகவல்களை பரப்புவோரை ராக்கெட் விட்டு கண்டுபிடிக்க முடியாது. இதற்கு தீர்வு காண எந்திர ரீதியிலான கட்டமைப்பு அவசியம். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டு வாட்ஸ் அப் மீது ஏற்படும். இதை நோக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது’’ என்றார்.