ந்திய பாரளுமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்களும், சமூக ஊடாடு செயலிகளும் பெரும்பங்கு வகிக்க உள்ளநிலையில் வாட்சப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க உள்ளது.

ஏற்கனவே ரிவர்ஸ் இமேஜ் சேவை மூலம் தங்களுக்கு படங்கள் குறித்த விபரங்களை கூகிள் படத்தேடலில் காணும்படி செய்திருந்த வாட்ஸ்அப் தற்போது ஏதேனும் நமக்கு வரும் செய்திகளின் நிலையை அறிய  உடனடியாக நமக்கு வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்தும் .

வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியர்களுக்கென்று பிரத்யேக சேவை எண் : +919643000888 என்ற எண்ணை அறிவித்துள்ளது. இதன் படி வாட்ஸ்  பயனாளர்கள் தங்களுக்கு வரும் தகவல் மற்றும் வீடியோக்கள் உண்மை யானதா? என்ற சந்தேகம் எழுந்தால் இந்த வாட்ஸ்அப் சேவை எண்ணுக்கு தகவல் அனுப்ப வேண்டும் .

இந்தச் சேவையை Proto என்று நிறுவனத்துடன் இணைந்து தங்களது சேவையை அளிக்க வாட்ஸ்அப் அளிக்க உள்ளது.

Proto நிறுவனம் புரளி செய்திகளின் தகவல் தரவு மையத்தினை வகைப்படுத்தி அந்த தகவல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளின் நிலையை வழங்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் சென்ற தேர்தலில் ராகுல்காந்தி அளித்த வாக்குறுதியை இந்த வருடம் காட்டினால் அந்தத் தகவல் சரி என்றால் சரி என்றோ அல்லது தவறு என்று காட்டப்படும்.

ஆரம்பிநிலையில் உள்ள  சேவை என்பதால் நிறுவனத்திடம் இருந்து தகவல் கிடைக்க சற்று தாமதமாகும்.

இந்த சேவையானது இந்திய வாட்ஸ்அப் சேவை எண்  ஆங்கிலம் , ஹிந்து , பெங்காலி , மலையாளம் ,  தெலுங்கு உள்ளிட்ட ஐந்து  மொழிகளில் இயங்குகிறது. தமிழில் இன்னமும் வசதிஅளிக்கப்படவில்லை என்பதற்கு  பத்திரிக்கை.காம் தனது கண்டனத்தையும்  தெரிவித்துக்கொள்கிறது.

-செல்வமுரளி