றிவியல் முன்னேற்றம் பெருகப்பெருக… மனிதனின் அறிவு மழுங்கி வருகிறது என்பார்கள்.
தகவல் தொடர்பின் உச்சம் என சொல்லப்படும் வாட்ஸ்அப் எனும் நவீன  வசதி மூலம்தான் தற்போது வதந்திகளும் அருவெறுப்பான பொய்களும் பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன், வாட்ஸ் அப்பில் ஒரு படம் உலவியது.

போட்டோஷாப் படமும், ஒரிஜினலும்
போட்டோஷாப் படமும், ஒரிஜினலும்

“தமிழை ஒழித்திடு” என்று எழுதப்பட்ட பேனரோடு இந்து முன்னணியினர் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி அது.
அவர்களுக்கு தமிழ் பிடிக்காது என்பதும், சமஸ்கிருதமும், இந்தியும்தான் பிடிக்கும் என்பதும் ஊரறிந்த ரகசியம்தான். ஆனால் அதை வெளிப்படையாக இப்படி போட்டு உடைப்பார்களா என்பதை யோசிக்காமல் பலரும் இந்த படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தார்கள்.
இன்னொரு படம்.
ஆட்டுக்கு நோட்டாம்!!
ஆட்டுக்கு நோட்டாம்!!

ஒருவர் தனது ஆட்டுக்கு ரூபாய் நோட்டுக்களை உண்ணக்கொடுக்கிறார் என்கிற குறிப்புடன் உலவியது.  இதையும் நம்பி பகிர்ந்தவர் பலர்.
அதே போல, கேரளாவில் ஒருவர் 250 ரூபாய் நோட்டை அச்சடித்து (!) சிக்கிகக்கொண்டதாக படத்துடன் தகவல்(!)
ருப்பீஸ் டூ பிப்டி!!
ருப்பீஸ் டூ பிப்டி!!

கள்ள நோட்டு அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் மிக மோசமான முட்டாள்கூட இப்படி 250 ரூபாய் நோட்டை அடிக்க மாட்டான்.  ஆனால் இந்த படத்தையும் நம்பி பலர் பகிர்ந்தார்கள்.
சரி, இதெல்லாம் ஏதோ காமெடி என விட்டுவிடலாம்.
இன்னொரு புகைப்படம்.
3
கழுத்து துண்டிக்கப்பட்ட ஒருவரின் தலையை கையிலெடுத்துக்கொண்டு காவல் நிலையம் வருகிறார் ஒருவர். “தனது தங்கையை பலாத்காரம் செய்தவனை கொலை செய்து, தலையை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த கர்நாடக இளைஞர்” என்று ஒரு குறிப்பு.
பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை… படத்தை பார்த்தாலே போட்டோ ஷாப் என்று தெரிந்துவிடும்.
ஆனால் அந்த கற்பனை எவ்வளவு வக்கிரமானது. கழுத்து துண்டிக்கப்பட்ட (!) அந்த இளைஞர் யாரென தெரியவில்லை. ஒருவேளை அவர் தூங்கும்போது படம் எடுத்து, பிறகு போட்டோ ஷாப்பில் கழுத்தை வெட்டியிருக்கலாம். இந்த படத்தை அவர் பார்த்தால் என்ன நினைப்பார்?
அதே போல இன்னொரு வக்கிரம்.
14463661_1100135096735409_965685562_n
சீனாவில் மார்பு ஜோதிடம் என்று. பெண்களின் மார்பை தடவி, ஜோதிடம் சொல்கிறாராம் ஒருவர். இந்த படத்தையும் பார்த்த உடனே சொல்லிவிடலாம், போட்டோஷாப் என்று. ஆனால் இப்படி ஒரு வக்கிரமான கற்பனை வருகிறதே… அதை என்னவென்று சொல்வது?
இதையும் நம்பி பகிரும் “அறிவாளிகள்” நிறைய பேர் இருக்கிறார்களே!
இவை எல்லாமே கடந்த ஓரிரு நாட்களில் பரவிய பொய்ப்படங்கள்.  இப்படி நிறைய படங்கள் பரவுகின்றன.
விநாடி நேரத்தில் தகவல்களை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லும் வசதி படைத்தது வாட்ஸ் அப். இது ஒரு பெரும் அறியவியல் அதிசயம்.
அதை சரியாகப் பயன்படுத்த வேண்டாமா, வக்கிர மனிதர்களே?