இனி வாட்ஸ்ஆப்பில் நேரடி காணொளி காட்சி அழைப்பு (Video call) பயன்படுத்தலாம்.

அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், உலகில் 100 கோடி வாடிக்கையாளரகளை தன்னகத்தே கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம். பலகோடி மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் புதிது புதிதான தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வது வருகிறது. தற்போது, நேரடி காணொளி காட்சி அழைப்பு (Video call) வசதியை வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

androidpit-whatsapp-video-call-0043-3வாட்ஸ்ஆப் நிறுவனமானது நேரடி காணொளி காட்சி அழைப்பு (Video call) குறித்து ஏற்கனவே ஆல்பா மற்றும் பீட்டா எனப்படும் இரண்டு கட்ட சோதனைகளை செய்து இருப்பதாகவும், இந்தியர்கள் தான் வாட்ஸ்ஆப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே இந்தியாவில் அறிமுகம் செய்தபிறகே ஏனையை 180 நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்திய வாட்ஸ்ஆப் நிறுவன விளம்பர தலைவர் கூறியுள்ளார்.

மேலும், நேரடி காணொளி காட்சி அழைப்பு (Video call) வசதியை தொழில்நுட்பத்தை வேறு விதமாக மாற்றாமல், வாய்ஸ் அழைப்பு செய்யும் பட்டனை அழுத்தும்போது, அதில் Voice call மற்றும் காணொளி காட்சி அழைப்பு (Video call) என்ற இரண்டு விருப்பங்களை தெரிவிக்கும். அதில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான விருப்பத்தை தேர்வு செய்து பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.