மிருக நாகரீகத்திற்கு அழைத்து செல்லும் வாட்ஸ் அப்-ஐ ஒழிக்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி ஆவேசம்

--

சென்னை:

மூக வலைதளமான வாட்ஸ் அப்-ஐ ஒழிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மனித நாகரீகத்தை மிருக நாகரீகத் திற்கு அழைத்து செல்கிறது சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி ஆவேசமாக கூறினார்.

சென்னை  விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினியின் பெரியார் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர், தந்தை பெரியார் மக்களிடையே சீர்திருத்தம், புரட்சி, மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற விசயங்களைக் கொண்டு, பொதுவாழ்க்கையை தொடங்கினார். அப்போது இருந்து ராஜாஜி மத நம்பிக்கையில் தீவிர பற்று  உடையவராக இருந்தார். ஆனால், இருவரும் நண்பர்கள்…. ராஜாஜி மரணமடைந்த போது இடுகாடு வரை சென்று அழுதவர் பெரியார்…. கொள்கை என்பது வேறு. பழக்கவழக்கங்கள், நட்பு என்பது வேறு என்று விளக்கியவர்,

பெரியார் தனக்கு சரியென தோன்றியதை கூறி வந்தார். அதை விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். விருப்பம் இல்லாதவர்கள் நிராகரித்து விடலாம். அது அவர்களுடைய மனநிலையை பொறுத்தது,  ஆனால் அவரது சிலையை  சேதப்படுத்தவது காட்டிமிரான்டித் தனம் , இது கண்டிக்கத்தக்கது என்று கண்டனம் தெரிவித்தார்.

தமிழர்களின் பெருமையை சீர்குலைக்கும் இது போன்ற செயல்கள் இனிமேலும் தமிழகத்தில் நடக்க கூடாது என்றவர், எச்.ராஜாவின் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது பெரியாரின் அறக்கட்டளை தேச உடைமையாக்கப்படும் என்ற கேள்விக்க, அது சர்வாதிகாரம் என்று கண்டித்தவர், அதுப்போல ஒருநிலை பாஜக அறக்கட்டளைக்கும் வராதா என்று கேள்வி எழுப்பினார். கொள்கை ரீதியாக பெரியாரை விமர்சிக்கலாம். அதைவிட்டு பேசுவது சரியானதல்ல.

தற்போதைய காலங்களில் சமூக வலைதளத்தில் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கிறார்கள், சிறுமைப் படுத்தப்பட்டு வருகிறார்… இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. இது மனித நாகரீகத்தை மிருக நாகரீகத் திற்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது என்று சாடியவர்,  சமூக வலைதளங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர், சீனா, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் வாட்ஸ் ஆப்பே கிடையாது. வாட்ஸ் ஆப் முறையை இந்தியாவிலும்  ஒழிக்க வேண்டும் என்று அதிரடியாக கூறினார்.

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. குழந்தைகள் கெட்டு போகின்றனர். எல்லா குழந்தைகளும் செல்போன்களை வைத்து பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் படிப்பு, மனசு, பொன்னான நேரம் கெடுகிறது. வாட்ஸ் ஆப்பில் வரும் 99 சதவீத செய்திகள் தவறானது என்று தெரிவித்தவர்,  சமூக வலைதளங்கள் பொறுப்பு அற்ற முறையில் செயல்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

சமூக வலைதளங்களுக்கு  எதிராக கடிவாளம் போட நீதிமன்றம் எடுக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றவர்,  திமுகவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் கையெழுத்து இயக்கத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்து பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.