வாட்ஸ் அப் செயலி திடீர் என ஒரு மணி நேரம் முடக்கம் : இப்போது செயல்படுகிறது

டில்லி

வாட்ஸ் அப் செயலி திடீரென சில நிமிடங்களுக்கு முடங்கியது

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது.  பலரும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இயலாமல் தவித்தனர்.   இதற்கான காரணத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சிறிது நேரத்தில் சேவை மீண்டும் துவங்கி உள்ளது.  இந்த தற்காலிக முடக்கம் மேற்கு ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களில்  முழுவதுமாக நிகழ்ந்துள்ளது.  அதே நேரத்தில் உலகின்பல பகுதிகளிலும் இந்த முடக்கம் நிகழ்ந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த சேவை மீண்டும் துவங்குவதற்குள் பலர் டிவிட்டர் மூலம் இது குறித்து புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.   இந்த முடக்கம் இந்திய நேரப்படி பகல் 1.45 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.