வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கை யாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம்  NGO Group மீது வாட்ஸ்அப் நிறுவனம் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மகாணத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

NSO Group நிறுவனமானது உலகமெங்கும் உள்ள அரசாங்கத்திற்கு கண்காணிப்பு மென்பொருள் களை விற்கும் பணியை செய்து வருகின்றது.

இலாப நோக்கற்ற டிஜிட்டல் கண்காணிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஒரு தொழில்நுட்ப நிறுவனம் முதன்முதலில் இந்த வழக்கைத் தாக்கல் செய்வது, இந்த கண்காணிப்பு தொழில்நுட்பங்களை விரைவாகவும் பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாமலும் ஏற்றுக்கொள்வதன் “முடிவின் ஆரம்பம்” என்று சிட்டிசன் ஆய்வகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்காட்-ரெயில்டன் கூறினார் ,

வாட்ஸ்அப் நிறுவனம் டொராண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிட்டிசன் லேப் என்ற ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து பணியாற்றி  NGO Group வின் உளவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி வருகிறது.

NGO Group கண்காணிப்பில் 100 ஊடகவியலாளர்கள், முக்கிய பெண் தலைவர்கள், அரசியல் அதிருப்தியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் குறிவைக்கப்பட்ட பலரும் அடங்குவதாக செய்திகள்  தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புகாரில் தங்களது செயலியில் உளவு பார்க்க பயன்படுத்திய சில சேவைகள் NSO Group ஆல் நிர்வகித்து வரும் மேகக்கணிமை வழங்கிகளில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

-செல்வமுரளி