பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் சேவையில் புதிய மாற்றங்களை இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அனைவரும் கட்டாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய தனியுரிமை கொள்கையை யாரும் புறக்கணிக்க முடியாது.

புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள், பிப். 8 க்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது.

பேஸ்புக் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைய, வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை மாற்றியமைத்திருக்கிறது.

பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சேவையைப் பயன்படுத்த விரும்பினால் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும். சேவையை பெற தேவையான தகவல்களை வழங்க வாட்ஸ்அப் செயலிக்கு அனுமதி வழங்காவிட்டால், அந்த சேவையை பெற பயனர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

உதாரணத்திற்கு, உங்கள் மொபைலிலிருந்து உங்கள் இருப்பிடத் தரவைச் சேகரிக்க வாட்ஸ்அப்பை அனுமதிக்காவிட்டால், உங்கள் இருப்பிடத்தை உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

ஒரு அம்சத்தைப் பயன்படுத்தத் தேவையான தகவல்களை வழங்க வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் அந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது,

ஆண்டிராய்டு மற்றும் ஐ-போன் சாதனங்களில் உள்ள அமைப்புகளின் மெனு மூலம் இந்த அனுமதிகளை நிர்வகிக்க முடியும் என்று அந்நிறுவனம் அதன் இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.