சான் ஃப்ரான்சிஸ்கோ

வாட்ஸ்அப் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் சில ஸ்மார்ட் ஃபோன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி குறிப்பிட்ட சில ஸ்மார்ட் ஃபோன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் “எங்களால் சில பிளாட்ஃபார்ம்களில் தொடர்ந்து செயல்பட முடியாது.   அதனால் அத்தைகைய பிளாட்ஃபார்ம்களில் எந்த நேரத்திலும் எங்கள் சேவை தடை பெறக் கூடும்.   வாட்ஸ்அப் செயலியில் தற்போது மேம்படுத்தப்பட்ட பல சேவைகள் உள்ளன.  அவைகளை இந்த பிளாட்ஃபார்ம்களால் இயக்க முடியவில்லை.  அப்படிப்பட்ட பிளாட்ஃபார்ம்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துமாயின்  வாட்ஸ்அப் வசதி உங்கள் ஃபோனில் டிசம்பர் 31க்கு மேல் இருக்காது.

நீங்கள் உங்கள் ஓஎஸ் அப்கிரேட் செய்து பார்க்கவும்.   அதன் பின் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் செயல்பட ஓரளவு வாய்பு உண்டு.   பிளாக் பெரி ஓஎஸ், பிளாக் பெரி 10 மற்றும் நோக்கியா எஸ்40 ஆகிய ஃபோன்களில் டிசம்பருக்கு பின் வாட்ஸ்அப் இயங்காது” என தெரிவித்துள்ளது.