புதுடெல்லி: ‘மாற்றுத் திறனாளிகள்(வீல் சேர்) கிரிக்கெட்டில்’ இந்திய அணிக்காக பங்கேற்ற தாமி என்ற வீரர், தற்போது ஊரடங்கு வறுமையால் கல் உடைக்கும் பணியில் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.
இவர், இந்திய அணிக்காக மொத்தம் 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்தும் முடங்கியது. இதனால், தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய இவர், வறுமை காரணமாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுச் சங்கம் மற்றும் அரசின் பல துறைகளுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதியும்கூட, யாரும் கண்டுகொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள இவர், பிச்சையெடுப்பதைவிட, இப்படி தினக்கூலி வேலை பார்த்து வாழ்வது மேல் என்பதால், இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார் அவர்.
மகளிர் கிரிக்கெட்டையே கண்டுகொள்ளாத இந்நாட்டில், மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டெல்லாம் கவனம் பெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.