நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? தமிழகஅரசு இன்று அறிக்கை தாக்கல்…

டெல்லி:

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்த பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்க மாநில அரசுகளுக்கு  மத்தியஅரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தமிழகஅரசு இன்று மத்தியஅரசுக்கு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்தும், தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக, குஜராத் போன்ற 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கட்டுக்குள் வராமல் உள்ளது.

இதனால், கல்வி ஆண்டு தொடங்கியும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால்,பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், அரசு பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.  மாநிலங் களில் உள்ள கொரோனா பாதிப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதடர்பாக  கடந்த 15ஆம் தேதி மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாநிலத்தின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்டு, செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகிய மாதங்களில் பள்ளிகளை திறக்கலாமா, இதுகுறித்து பெற்றோர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து கேட்டு வருகின்ற 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.   பள்ளிகளை எப்போது  திறக்கலாம் என்று பெற்றோர்கள்  கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கருத்துக்களை வரும் 20ம்  தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு இன்று மத்தியஅரசுக்கு பதில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.