டில்லி,

குஜராத் மற்றும் இமாச்சல் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த இரு மாநிலங்களின் பதவிக்காலம் ஜனவரி 2018ல் முடிவடைய இருப்பதால் இரு மாநிலத்துக்கும் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

டில்லியில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணைய தலைவர் அச்சல்குமார் ஜோதி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு  என்றும், டிசம்பர் 18ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குஜராத்தில்  சட்டப்பேரவை தேர்தல்  டிசம்பர் 18க்கு முன்னர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சல பிரதேசத ஆட்சி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ந்தேதியும், குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி 22, 2018 அன்றும் முடிவடைகிறது என்று தெரிவித்தார்.

தற் போது  குஜராத் மாநிலத்தில் பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இமாச்சலில் மகளிர் பணியாற்றும் வகையில் 136 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வருவதாகவும், ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.28 லட்சம் வரை மட்டுமே தேர்தல் செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அனைத்து பிரம்மான பத்திரங்களும் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை பெற சமூக வலைதளங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் என்றும் கூறினார். தேர்தலை கண்காணிக்க மைக்ரோ அப்செர்வர்கள் நியமிக்கப்படுவார்கள், பெண்கள் அதிகமாக உள்ள வாக்கு சாவடிகளில் பெண்களே பணியாற்றுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், தேர்தலின்போது மத்திய படை போலீசார் மாநில போலீசாருடன் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.