நான் எப்போது மீண்டு வருவேன்? பாவனா உருக்கம்!

கொச்சி,
துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். அவற்றிலிருந்து நான் எப்போது மீண்டு வருவேன் என்று நடிகை பாவனா உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த 17ந்தேதி திருச்சூர் அருகே பட்டுரைக்கல் என்ற இடத்தில் நடைபெற்ற  படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கொச்சியில் உள்ள பனம்பிள்ளை நகருக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது கார்மீது  நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே கேட்டரிங் வேன் ஒன்று வந்து மோதியது. அதில் வந்த சிலரால் பாவனா கடத்தப்பட்டு பாலியல் சேட்டைக்கு ஆளானார்.

இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கடத்தலுக்கு துணையாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், பாவனா கடத்தல் விவகாரத்தில் மலையாள நடிகர்கள், கேரள அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து 10 நாட்களுக்கு பிறகு தனது கருத்தை பதிவு செய்துள்ளார் நடிகை பாவனா. அவர் கூறியிருப்பதாவது,

வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களையும் அது எனக்கு காண்பித்து உள்ளது என்றார்.

மேலும்,  துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டு வருவேன்?

எனக்கு ஆதரவு கொடுத்த  உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.