தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது? இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் தலைமை தேர்தல் ஆணையாளர்

டில்லி:

ன்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர்  செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக இடைத்தேர்தல் உள்பட சில மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

அப்போது,  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும், மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.