3தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பதில்

 சென்னை:
மிழகத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள 3 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் காலமானாதைத் தொடர்ந்து அவர்களுடைய தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தகம் தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாஹு,  காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
இருந்தாலும்,  தேர்தலை நடத்த தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக  இருப்பதாக வும், இது தொடர்பாக  காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.