இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை:

ட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு காரணமாக காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்துக்கு  எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி விடுத்துள்ளது.

வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர், காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று  மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும்,  இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும்,   2 தொகுதிக் கான தேர்தல் கால அட்டவணை ஏதும் இருந்தால் அதனை நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 26ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.