நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டனவா என்று தமிழக மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவுட வேண்டும் என்று பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்ளாக வெளியிட உத்தரவிட வேண்டும்” கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முதற்கட்டமாக கிராம பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது என்றும் அது முடிந்த பின் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை பதில்மனுவாக தாக்கல் செய்யவும், நகராட்சி, மாநகராட்சி களுக்கு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளதா என்பத குறித்து, தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்க  உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

HC questions to State EC