சென்னை,

மிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், யார் யாரெல்லாம் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் இன்று ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகளிடம் ஆய்வு செய்து, அபராதம் விதித்து வருவதாகவும், பல இடங்களில்  ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று  எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.