மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் 56000 பெட்ரோல் பக்குக்கு அரசு அனுமதி

டில்லி

டந்த 4 வருடங்களில் முதல் முறையாக பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசு 56000 பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

நாடெங்கும் தற்போது 55000 பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இதில் 50% இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது தவிர தனியார் நிறுவனங்களான எஸ்ஸார் ஆயில் நிறுவனம் 3000 பங்குகளையும், ரிலையன்ஸ் நிறுவனம் 600 பங்குகளையும் இயக்கி வருகிறது. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களான பிபி மற்றும் ஷெல் தலா 100 பங்குகளை இயக்கி வருகிறது.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைகளின் விற்பனை ஆண்டுக்கு தலா 8% மற்றும் 4% என அதிகரித்து வருகிறது. ஆகவே இந்த பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயில் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி 55,649 புதிய பெட்ரோல் பங்குகள் அமைக்க நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரின. அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த பெட்ரோல் பங்குகள் நகரங்களில் மட்டும் இன்றி புற நகர், சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப்பட உள்ளன. அதற்கான டெண்டரை ஆயில் நிறுவனங்கள் கோரி உள்ளன. இந்த பெட்ரோல் பங்க் திறப்பால் பல்லாயிரக்கணகானோருக்கு வேலை வாய்ப்பு கிடக்கும் எனவும் அத்துடன் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி நிதி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்து 4 வருடங்களில் பெட்ரோல் பங்க் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசு சுமார் 56000 பெட்ரோல் பங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.