கொல்கத்தா:

பிஎல் போட்டி முடிவடைந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விறுவிறுப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி குறித்து ருசிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தோனிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. அதன் காரணமாகவே அவரும் தமிழகத்துக்கு வருகை தருவதையும் விரும்புவார். அதே நேரத்தில் ஆட்டத்தின்போதும், விறுப்பு வெறுப்பின்றி, சக வீரர்களுக்கு ஆலோசனைகளை, உரிய நேரத்தில் வழங்கி ஊக்குவிப்பார்.

தோனி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான் ருசிகர தகவல் ஒன்றை  தெரிவித்துள்ளார்.  கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபேடி அப்டானிடம்  தோனி  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் வியப்பை ஏற்படுத்தியது.  நான் மனநல ஆலோசகராக இந்திய அணியில் சேரும் போது நடந்த சம்பவத்தை இங்கு நினைவு கூற நினைக்கிறேன் என்று தெரிவித்தவர், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அனில் கும்ப்ளேவும், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தோனியும் இருந்தனர். அப்போது பயிற்சிக்குத் தாமதமாக வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பது குறித்து எங்கள் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது கும்ப்ளே, பயிற்சிக்க  தாமதமாக வரும் வீரர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்றார். ஆனால்  தோனியோ வீரர் ஒருவர் தாமதமாக வந்தால் கூட, அணியில் உள்ள அனைவருக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று  அதிரடியாகக் கூறினார்.

இதன் காரணமாக அங்கு சிரிப்பலை எழுந்தது. ஆனால் அவரின் ஆலோசனை வியப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பயிற்சிக்கு எந்தவொரு வீரரும் தாமதமாக வந்ததே   இல்லை’ என்று சிரித்து கொண்டே  மனம் திறந்து பாராட்டினார்.