ராஜினாமாவிற்கு முன்னரே வீட்டை காலி செய்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

தேர்தலில் போது  நம்மூர் அரசியல்வாதிகள் சவால் விடுவார்கள். பிறகு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மறந்தும் விடுவார்கள். நாமும்தான். ஆனால், தான் சொன்னபடி சவாலில் தோற்றவுடன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் இங்கிலாந்து பிரதமர்.

இதன் விவரம்:  இங்கிலாந்து பிரதமர் கேமரூன்  கடந்த ஆறு வருடங்களாக    டவுனிங்க் தெருவில் உள்ள  10ம் எண் வீட்டில்  மனைவி மற்றும்  நான்சி,   ஆர்தர்  மற்றும்  ஃப்ளோரன்ஸ் ஆகிய மூன்று குழந்தைகளுடன்   வசித்து வந்தார்.  இவரது மூத்த பையன் இவான் இறந்து விட்டான்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவுகுறித்து   நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் (பிரெக்சிட் ) இங்கிலாந்து மக்கள் “வெளியேறுவது” எனத் தீர்ப்பளித்தால், தமது பதவியைத் துறப்பதாக அறிவித்து இருந்தார் பிரதமர் டேவிட் கேமரூன்.

இதுகுறித்து  நடைபெற்ற வாக்கெடுப்பில்  மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதென வாக்களித்துவிட்டனர்.

இதனை அடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இன்று  முறைப்படி தன் ராஜினாமாவை சமர்ப்பிக்க உள்ளார்.  இந்நிலையில் அவர் தனது வீட்டை நேற்றே காலி செய்துவிட்டார்.

cam02
சாமான் ஏற்ற காத்திருக்கும் வண்டி. நன்றி: டெய்லி மெயில்

இன்று ராஜினாமா கடிதத்தை ராணியிடம் சமர்ப்பிக்கும்போது வீட்டுச்சாவியையும் அளிப்பாரெனத் தெரிகின்றது.

இவர் வீட்டிலிருந்து “வீட்டு உபயோக பொருட்கள்” எடுக்கும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் தெரிவிக்கையில் 330 பெட்டிகள், 30 டேப்கள், 3 பாலீதின் உறைகள் பயன்படுத்தப் படவுள்ளதாகத் தெரிவித்தார்.

cam 03

கேமரூனுக்கு சொந்தமான 32 கோடி மதிப்புள்ள நாட்டிங் ஹில்லில் உள்ள வீட்டினை வாடகைக்கு விட்டிருப்பதால், தற்பொழுது அவர் உடனடியாக எங்குக் குடியேறுவார் என்பது தெரியவில்லை.

cameron 7
14 ஜூலை வீட்டை விட்டு குடும்பத்தினருடன் வெளியேரும் முன்னாள் பிரதமர் கேமரூன்.

தான் சொல்லியவாறே செய்யும் விதமாக,  அவர் தமது அரசுக் குடியிருப்பை நேற்று காலி செய்தார்.

cameron8

 

cameron2

 

cameron 1

cameron5

 

இந்தியாவில் அரசியல்வாதிகள் தாங்கள் பதவி வகித்தபோது அரசு அளிக்கும் குடியிருப்பைக் காலி செய்யாமல் காலம் கடத்துவது வழக்கம். எம்.பி. உட்பட பல மந்திரிகளும் இதில் அடக்கம். சில சமயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுக் கண்டனமும் தெரிவித்துள்ளது.

 

cam1
“ஸ்வச் பாரத்” என படப்பிடிப்பு நடத்துபவர்கள் போலில்லாமல் நிஜமாய் குப்பைக் களத்தில்    கேமரூன்
cam2
தனி விமானத்தில் பறப்பவர்கள் போலில்லாமல் மக்களோடு மக்களாய் பயணிக்கும் கேமரூன்
cam 01
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றப் பிறகு, பிரதமர் இல்லத்தில் குடியேறும் போது தானே வீட்டு உபயோகப் பொருட்களைத்  தூக்கிய காட்சி (2010). இந்தப் படம் நேற்று எடுத்தது போல் பல சமூக ஊடகங்களில் வெளியானது. நாமும் அவ்வாறே வெளியிட்டோம்.  தவறுக்கு வருந்துகின்றோம்.

 

உலகின் நிதித் தலைநகர்  என வர்ணிக்கப்படும் லண்டனின்  பிரதமர் எளிமையாய் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

நம் அரசியல் தலைவர்கள் “எளிமை”யைக் கற்றுக் கொள்வார்களா?

நன்றி: லோகோசிட்டிரிப்போர்ட்டர்ஸ்.காம்,  தந்திடிவி ( படம்)

Leave a Reply

Your email address will not be published.