சென்னை:

நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்.

இதையடுத்து தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்  தேர்தல் ஆணையம், “தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட டெபாசிட் தொகை செலுத்திய வேட்பாளர்கல் தங்கள் டெபாசிட் தொகையை பதினைந்து நாட்களுக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும், இன்னும் ஒரு வருடத்துக்குள் ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

தி.நகரில் உள்ள ராதிகாவின் ரேடன் டிவி அலுவலகத்தில் சோதனை.