Random image

எனக்கு ஹெல்மெட் கிடைக்குமா? குஜராத் இளைஞரின் ஏக்கம்!

அகமதாபாத்:

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அபராதம் தொடர்பான சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் தலைக்கு ஏற்றவாறு ஹெல்மெட் இல்லாமல் அவதிப்படுகிறார். தனக்கு ஹெல்மெட் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது தலையின் அளவுக்கு ஹெல்மெட் இல்லாததால், அவருக்கு அபராதம் விதிக்க முடியாத போலீசார் தற்காலிகமாக அவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கி உள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல் கட்டணம் பலமடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநில அஹமதாபாத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய ஜாகீர் மாமோன் என்பவரை மடக்கி  போக்குவரத்து போலீசார், அவரது தலை அளவுக்கு ஏற்றவாறு ஹெல்மெட் கிடைக்காததை அறிந்து  அபராதம் விதிக்கமுடியாத சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபரான   ஜாகிருக்கு என்பவரின் தலை இயற்கையாகவே மற்றவர்களின் தலையைவிட பெரிதாக உள்ளது. இதன காரணமாக அவரது தலைக்கு ஏற்ற ஹெல்மெட்கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, ஜாகிருக்கு  ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்ட ஓருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய ஜாகிர்,  “நான் போக்குவரத்து சட்டத்தை மதிக்கிறேன் என்றவர், எனது தலையின் அளவுக்கு ஏற்றவாறு ஹெல்மெட்டை தேடி பல கடைகளுக்கு சென்றுவிட்டேன்… ஆனால் எங்குமே கிடைக்கவில்லை… எனது பிரச்சினையை காவல்துறையினரிடமும் தெரிவித்து இருக்கிறேன்… எனது தலையின் அளவுக்கு ஏற்றவாறு எந்த நிறுவனமானவது ஹெல்மெட் செய்து தந்தால்தான், நான் ஹெல்மெட் அணிய முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக பேசிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்,  “ஜாகிரின்  பிரச்சினை  எங்களுக்கு புரிகிறது அவருக்கு நாங்கள் எந்தவிதமான அபதாரமும் விதிக்கவில்லை, தற்காலிகமாக அவருக்கு ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

எனது தலையின் அளவுக்கு ஹெல்மெட் கிடைக்குமா என்று ஏக்கத்துடன் உள்ளார் ஜாகிர்…