Random image

அதிமுக தொடங்கப்பட்டபோது ரஜினி ‘பரட்டை’யாக இருந்தார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்:

திமுக தொடங்கப்பட்டபோது ரஜினிகாந்த் பரட்டையாக இருந்தார் என்று தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக தாக்கி பேசினார்.:

மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது,

அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். படத்துக்கு அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசி வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர். அவருக்கு என்னத் தெரியும் என கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆட்சிக்கு தினகரனும், மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க ஸ்டாலினுடன் மறைமுகமாக தினகரன் கூட்டணி வைத்துள்ளார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடைபெறும். அதன் பின்னரும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்றார்.

தற்போது திமுக தலைவராக உள்ள  மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராக தகுதியும், ராசியும் கிடையாது. அவர் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது என்று கூறினார்.

ஜெயலலிதாவால் போயஸ்கார்டன் மற்றும் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் தினகரன். இவர் தற்போது ஜெயலலிதா படத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆர்.கே. நகரில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? என்றவர்,  அவர்  கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் சேருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார் என்றும் கூறினார்.

மேலும்,  அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் எம்.ஜி.ஆர். படத்துக்கு அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசி வருகிறார். இன்று சூப்பர் ஸ்டாராக உள்ள  ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர் என்றும்,  கருணாநிதியை எதிர்க்கவே அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் தி.மு.க.தான் அ.தி.மு.க.வுக்கு எதிரி.

இவ்வாறு அவர் கூறினார்.