காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

மதுரை:

மிழகத்தில் jதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்  மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்த தலைமைச் செயலாளர்  தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும், காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவது குறித்த, ஜனவரி 24 ம் தேதிக்குள்  முடிவெடுக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி