18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது?

சென்னை:

டிடிவி ஆதரவு  18 எம்எல்ஏக்களை சபாநாயகர்  தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு 3வது நீதிபதி முன்பு கடந்த ஆகஸ்டு 31ந்தேதியுடன் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விசாரணை முடிந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆன நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கின்  தீர்ப்பு அடுத்த மாதம் இறுதியில்தான் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அரசுக்க  எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி  ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் பதவி நீக்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி, தலைமை யலின  2 நபர் பெஞ்சு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தால், 3வது நீதிபதியாக  நீதிபதி மாலா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து டிடிவி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது

அதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்ற சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க  உச்சநீதி மன்றம்  நியமித்தது.

இதையடுத்து3வது  நீதிபதி சத்யநாராயணன்  கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார். விசாரணை யின்போது,  அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதங்கள்  முடிவடைந்த நிலையில், இறுதியாக ஆகஸ்டு 31ந்தேதி  சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாக அறிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து சுமார் 1 மாத காலம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நீதிபதி சத்ய நாராயணன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் நீதிமன்றங்களுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்குள் தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால், தீர்ப்பு அடுத்த மாதம் இறுதியில்தான் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரித்த 3வது நீதிபதி சத்தியநாராயணன், அடுத்த மாதம் அக்.10ம் தேதி லண்டன் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.