பசுமை பட்டாசுகள் கிடைக்காத போது அதை எப்படி விற்பது : டில்லி வர்த்தகர்கள் கேள்வி

டில்லி

சுமை பட்டாசுகள் எங்குமே கிடைக்காத போது அவற்றை எவ்வாறு விற்க முடியும் என டில்லி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகம் ஒலி எழுப்பாத புகை குறைவாக வரும் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அத்தகைய பட்டாசுகளையும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி காவல்துறையினர் கண்காணிப்பு பணியை நிகழ்த்தி வருகின்றனர்.

நேற்று மாலை மேற்கு டில்லியில் உள்ள மாடல் பஸ்தி பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.    அப்போது அங்கு வந்த செய்தியாளர் ஒருவர் அங்கிருந்த கடைக்காரரிடம் இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்கார்கள், “நாங்கள் 40 வருடங்களாக பட்டாசுகள் விற்பனை செய்து வருகிறோம். ஆனால் தற்போது பண்டிகை நேரத்தில் எங்களுடைய முழு விற்பனையும் இந்த உத்தரவால் கெட்டு விட்டது.

கடந்த 3 நாட்களாக நான் கடையை திறக்காமல் இருக்கிறேன். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அத்தைகைய பட்டாசுகள் எங்குமே கிடைப்பதில்லை. அப்படி இருக்க நாங்கள் எவ்வாறு அந்த பட்டாசுகளை மட்டும் விற்க முடியும்?

ஏற்கனவே வாங்கி வைத்துள்ள பட்டாசுகளை இதனால் விற்க முடியாமல் தவித்து வருகின்றோம். அதனால் நாங்கள் வரும் புதன்கிழமை அன்று கடையை திறந்து பொதுமக்களுக்கு இலவசமாக பட்டாசு விநியோகம் செய்ய எண்ணி உள்ளோம். விற்பனை செய்ய மட்டுமே தடை உண்டு. இலவசமாக அளிக்க தடை இல்லை” என கூறி உள்ளனர்.

உச்சநீதிமன்ற்த்தின் இந்த உத்தரவு  டில்லி போலீசாரை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.