சென்னை:
பிளஸ்2 தேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு  இன்று இணையதளத்தில் வெளியீடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் tnresults.nic.in,  dge1.tn.nic.indge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து தமிழக தேர்வுத்துறை கூறியுள்ளதாவது:
கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாத மாணவர்களின் தேர்வு முடிவும் வெளி யானது;
மாணவர்கள் எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தேர்வுத்துறை மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது