வைகோ ரிலீஸ் எப்போது?

சென்னை:

தேசத்துரோக வழக்கில் சிறையில் இருந்த வைகோவுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை பெற்று, புழல் சிறையில் அளித்த பிறகே அவர் வெளியில் வர முடியும். இந்த நிலையில்  நாளை (25.05.2017) காலை 9.00 மணியளவில் வைகோ புழல் சிறையில் இருந்து வெளியே வருவார்” என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.