28வது நாளாக நடிகர் மருத்துவமனை வாசம்.. குணம் ஆகாத கொரோனாவால் மனச்சோர்வு..

பாலிவிட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய், ஆராத்யா கடந்த 2 வாதத்துக்கு முன் கொரோனாவால பாதிக்கப்பட்டனர். ஒரு சில மணிநேர இடைவெளியில் இவர்கள் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து குணம் அடைஉஅ விரும்பி மெசேஜ் பகிர்ந்தனர். ரசிகர்கள் பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனை, ஹோமம் நடத்தினர்.

இந்நிலையில் அமிதாப். ஐஸ்வர்யாராய். ஆராத்யா மூவரும் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள் அபிஷேக் மட்டும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். 28 வதுநாளாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இதனால் அவ்வப்போது சோர்வு மனப்பான்மை எழ அதிலிருந்து மீள்வ தற்கு பாடல் கேட்டு வருகிறார்.
இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந் துள்ள மெசேஜில்.’மருத்துவமனையில் 28வது நாளாக இருக்கிறேன். ஷாருக்கான் நடித்த ’சுவாதேஷ்’ படத்தில் வந்த ’யென் ஹி சாலா..’ பாடலை பின்னணியில் கேட்டுக்கொண்டிருக் கிறேன்’ எனக் கூறி உள்ளார்.
மற்றொரு டிவிட்டில். ‘அபிஷேக், ம்ம்ம், ’உன்னால முடியும் ’ என சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆக விருப்பம் தெரிவித்து தனக்கு தானே ஊக்கப்டுத்திக் கொண்டிருக்கிறார்.