பேட்ட’ படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன் அதற்கடுத்து விஜய் ஜோடியாக ’மாஸ்டர்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பெரிய அளவில் எதிர் பார்த்திருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படம் ரிலீஸ் ஆனதும் ஜப்பான் நாட்டுக்கு செல்ல திட்ட மிட்டிருந்தார். ஆனால் கொர்ரோன்னா ஊரடங் கால் பட ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம் வெளிநாடுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.


மாளவிகாவுக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் செல்வதென்றால் பிடிக்கும். இந்த தகவலை ரசிகர் ஒருவரின் கேள்விக்குபதில் அளித்தபோது அவரே தெரிவித்திருந்தார். விதவிதமான மனிதர்கள், மாறுபட்ட கலாச்சரங் களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் அவர் காடுகளுக்குள் சென்று மிருகங்களை மிக அருகில் நின்று படம் எடுக்கும் கலையிலும் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
மாளவிகா ஆசைப்படி ‘மாஸ்டர்’ படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ஆனால் அவரது ஜப்பான் பயண கனவுதான் எப்போது நிறைவெறும் என்று தெரியவில்லை.