மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? கனிமொழி கேள்வி

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று பாராளு மன்றத்தில்6 திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் கடந்த ஆண்டு (2019) நாட்டப்பட்டது.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அங்கு எந்த பணியும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என திமுக எம்.பி. கனிமொழி, பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துமூலம் பதில் அளித்துள்ள மத்தியஅரசு,  ஜப்பான் நிறுவனம் கொடுக்கும் கடன் அளவை பொறுத்தே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்கான  காலக்கெடு அமையும் என பதில் அளித்துள்ளது.