Random image

ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா?

சென்னை:

யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று பிகில் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசி பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விஜயின் பேச்சை ஊடகங்கள் ஒருபுறம் விவாதித்துக் கொண்டிருக்க, சமூக வலைதளங்கள் மற்றொருபுறம் விவாதித்துக்கொண்டு இருக்கின்றன.

நாட்டில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள்  எத்தனைய  செயல்படாமல் முடங்கி கிடக்கும் நிலையில், அதற்கு குரல் கொடுக்கவோ, மக்களோடு மக்களாக நின்று போராட்ட களத்தில் இறங்கவோ தயங்கும்,  நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது திரைப்படத்தை வெற்றிப்படமாக்கி, கோடி கோடியாக பணத்தை பதுக்குவதற்காக மட்டும்,  அவ்வப்போது, பொதுநலம் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்து விமர்சித்து, தங்களது ரசிகர்களை தூண்டி விடுவதை வாடிக்கையாகி வருகின்றனர்.

ஏற்கனவே இதுபோன்ற செயல்களை செய்து வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் , தான் அரசியலுக்கு வருவ தாக பல ஆண்டுகள் கூறி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மீக அரசியல் செய்யப் போவதகா கூறியவர், இன்னும் அதற்கான அடித்தளமே போடாமல், அவ்வப்போது தனது ரசிகர்களை கூட்டி, பரபரப்பாக பேசி, ரசிகர்களின் ஆதரவால் தனது தள்ளாத வயதிலும், தனது படத்தை  வெற்றிப்படமாக்கி கோடி கோடியாக பணம் சம்பாதித்து சொந்த மாநிலமான கர்நாடகத்தில் முதலீடு வருகிறார்.

தற்போது இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பெற்றுள்ளார். அவரை கொம்புசீவி விட சில இயக்குனர்கள் களமிறங்கி உள்ளனர். இதன் காரணமாக சமீப காலமாக  அசியல் நெடியுடன் பேசும் அவரது வசனங்கள்  படத்தில் அதிகம் காணப்படுவதுடன், சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும்போது அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக ஓலிமிடும் செயலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

ஜெ.மறைவுக்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு தனது தலைவா படத்தை வெளியிட நடிகர் விஜய் என்ன பாடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்து சரணடைந்து வாய்பொத்திச் சென்றவர், அவரது மறைவுக்கு பிறகு தனது கருத்துக்களை படங்கள் மூலம் மட்டுமே தெரிவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த சன்டிவி கலாநிதி மாறன் தயாரித்த சர்க்கார் படத்தில், அதிமுக அரசு வழங்கிய விலையில்லா  பொருட்களான  மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை உடைத்து, ஜெயலலிதாவின் மீதான தனது வன்மத்தை தீர்த்துக்கொண்ட விஜய், படத்தின் நிகழ்ச்சியின்போதும் பரபரப்பாக பேசி ரசிகர்களை உசுப்பேத்தி வந்தார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜய், முதலமைச்சரானால் , லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்றும், மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள் என்றும் பேசி ரசிகர்களுக்கு தீணி போட்டார்.

மேலும் ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம்,  ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஜய், இரவு நேரங்களில் சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து வருகறாரே தவிர, தன்னை வெளிப்படையாக மக்களுக்கு அறிமுகப்படுத்த தயங்கி வருகிறார். நேரடியாக களத்தில் இறங்கவும் பயப்படுகிறார்.

இதுபோன்ற சூழலில்தான், தற்போது நான்கு பக்கமும் சுவர்களால்  சூழப்பட்ட அறைக்குள் தனது வாயை திறந்து அதிரகாரவர்க்கத்தினருக்கு எதிராக  ஓலமிட்டு உள்ளார்.

நேற்று நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியவர்,  பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள். யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிடுவதாகவும், பிரிண்டரை பிடிப்பதாகவும், லாரி ஓட்டுநரை பிடிப்பதாக  குற்றஞ்சாட்டிவர், “யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க” என்றும் கூறினார்.

மேலும், தனது ரசிகர்களை அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்றும் உசுப்பேத்தி உள்ளார்.

விஜயின் பேச்சை ஊடகங்களை பெரிதுப்படுத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நடிகர் விஜய் இதை பூட்டிய அறைக்குள் இருந்து கூறாமல் வீதிக்கு வந்து கூற வேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளனர்.

இன்றைய தமிழக இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்களில் மட்டுமே இந்தி திணிப்பு, ஜல்லிக்கட்டு, வேலை யில்லை,  என்று கூக்குரல் போடுவார்களே தவிர, களத்திற்கு வந்து போராட முன்வருவதில்லை. களத்திற்குள் வந்து விளையாடுவது, கீழ்த்தட்ட மக்கள் மட்டுமே.

அதுபோன்ற கீழ்த்தட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் வேலையில்தான் தற்போது நடிகர் விஜயும் ஈடுபட்டு உள்ளார்.  ஏனென்றால், நடிகர்களுக்கு பேனர் கட்டுவதும், கட்அவுட் வைப்பதும் அடித்தட்டு மக்கள் மட்டுமே. கூலி வேலை செய்து வரும், அவர்கள்தான் தங்களது உணவுக்கு பணமில்லை என்றாலும், எதையாவது செய்து,  தங்களது தலைவர்களுக்காக உயிரைக் கொடுத்து களத்தில் இறங்கி செயல்படுவார்கள்… அவர்களுக்காக கொடி பிடிப்பார்கள்… கோஷமிடுவார்கள்…

தற்போதும், விஜயின் பேச்சு  அவரது ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி, உசுப்பேத்தி, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. ஏழை ரசிகர்களின் வாழ்வில் இனிமேலும் விளையாடாமல்,  தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நடிகர் விஜய்,நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் ஆவல்….எதிர்பார்ப்பு….

‘நடிகர் ரஜினியைப் போல ஓய்வுகாலத்தில் நேரத்தை கழிக்க அரசியல் களம்புக காத்திருக்கிறாரா?

பூட்டிய அறைக்குள் வீராவேசமாக பேசும்  நீங்கள் (நடிகர்கள்) அனைவரும் மக்களோடு மக்களாக இணைந்து வெளிஉலகத்திற்கு வந்து களத்தை காணுங்கள்….

எப்போது களத்தில் இறங்கப்போகிறார் நடிகர் விஜய்?