நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்ட்டதையடுத்து, கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.
fivehundred
அப்பணத்தை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை வங்கிகளில் டெப்பாசிட் செய்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்திருகிறது. அதே போல தற்காலிகமாக ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை நீங்கள் 100 மற்றும் 2000 ரூபாயாக மாற்றிக்கொள்ளும்வரை பயன்படுத்த முடியாது.
ஆனால் அவசர சூழல்களில் என்ன செய்வது? 1000, 500 நோட்டுக்கள் எங்கெல்லாம் செல்லும்?
பிரதமர் தனது உரையில் குறிப்பிடும்போது “மனிதநேய அடிப்படையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனை மருந்தகங்களிலும், ரயில்வே பயணச்சீட்டு பதிவகங்களிலும், அரசு பேருந்துகளிலும், விமான டிக்கெட் கவுண்ட்டர்களிலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் மத்திய மாநில அரசு கோ-ஆப்பரேட்டிவ் அங்காடிகளிலும், பால் பூத்களிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடுகாடு மற்றும் கல்லறைகளிலும் இந்த நோட்டுக்கள் செல்லுபடியாகும்.
அரசின் அறிவிப்புப்படி, மேற்கண்ட இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்க மாட்டார்கள். அதுபோக பணமில்லா வர்த்தகம் வழக்கம்போல சாத்தியமே! நெட்பேங்கிங், பே-டிஎம் ஆகிய வர்த்தக முறைகளும் செல்லுபடியாகும்.