ரஜினியின் காலா, விஜயின் கத்தி படத்தை லைகா தயாரித்தபோது பாரதிராஜா, முருகதாஸ் எங்கே போனீர்கள்? இலங்கை சமூக ஆர்வலர் கேள்வி

கொழும்பு: ரஜினியின் காலா, விஜயின் கத்தி படத்தை  இலங்கையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான லைகா தயாரித்தபோது பாரதிராஜா, முருகதாஸ் எங்கே போனீர்கள்? இலங்கை சமூக ஆர்வலர் எஸ்.டி. நளினி ரத்னராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை  800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.  5 மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட உள்ளது.
முத்தையா முரளிதரன் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பதில் அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என   தமிழ் அமைப்புகள்  போர்க்கொடி தூக்கி உள்ளன. மேலும்,  முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இயக்குனர் பாரதிராஜா உள்பட பல அரசியல் கட்சிகள் விஜய்சேதுபதிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். டைரக்டர் முருகதாசும் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. விஜய் சேதுபதிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பலர் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ராதிகா, விஜய்சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அப்போது, சன் டிவியின், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கடந்த சில வருடங்களாக முத்தையா முரளிதரன் பயிற்சியாளராக இருந்து வருகிறாரே, அதை ஏன் கேள்வி எழுப்பவில்லை என கடுமையாக சாடியிருந்தார். அதுபோல, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமாரும். காந்தி படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர். கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என 800 திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், இலட்ஙகையின்   பெண்கள் தொடர்பான சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா, 800 படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

லைக்கா உரிமையாளர்கள் முரளியை விட மஹிந்த அரசுக்கு பெரும் ஆதரவு தருபவர்கள் கூட்டு சேர்ந்து பல நடவடிக்கைகளை வியாபாரங்களையும் செய்பவர்கள் இவர்களைக் கொண்டு முருகதாஸ் மற்றும் மற்றைய தயாரிப்பாளர்கள் எத்தனையோ படம் எடுத்தார்கள்?

காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்,  கத்தி படத்தில் விஜய் நடித்தார் , தமிழ் மக்களுக்கு எதிரான லைக்கா போன்ற துரோகிகளின் நிதியில் படம் எடுக்க வேண்டாம் என்றும் நடிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் ஐயோ விஜயும் முருகதாசுக்கு சொல்லவில்லை ????

ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் நிதி இட்ட படத்தை ஆகா ஓகோ என்று எல்லோரும் ரசித்தீர்களா தானே ????

அப்போதெல்லாம் நம்முடைய சுயகௌரவம் அங்கே போனது தமிழ் உணர்வு எங்கே போனது பணம் வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது இதுதானோ ¿??

என கடுமையாக சாடியுள்ளார்.