டெல்லி கலவரத்தின் போது எங்கே போனார் அமித்ஷா? சாம்னாவில் கட்டுரை தீட்டிய சிவசேனா

மும்பை: டெல்லியில் கலவரம் நடந்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எங்குமே பார்க்க முடியவில்லை. அவர் எங்கு சென்றிருந்தார் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் 70 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியது.

அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 40ஐ எட்டியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி, ஜனாதிபதியை சந்தித்து காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடேனா சாம்னா, டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த அமித் ஷா தவறிவிட்டதாக விமர்சித்து உள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்காக அமித் ஷா நீண்டநேரம் ஒதுக்கினார். வீடு வீடாகச் சென்று பாஜக ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரிக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். ஆனால், கலவரம் நடந்து மோசமான சூழல் நிலவிய போது அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை. அவர் எங்கு சென்றார்?

ஒருவேளை, வேறு ஏதேனும் கட்சி மத்தியில் ஆட்சியில் இந்நேரத்தில் இருந்திருந்தால், உள்துறை அமைச்சர் பதவி விலக கோரி பாஜக மிகப்பெரிய ஊர்வலத்தையும், கண்டன பேரணியையும் நடத்தி இருக்கும்.

ஆனால், இப்போது அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் பாஜக ஆட்சியில் உள்ளது.எதிர்க்கட்சியினர் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள்.  நாடாளுமன்ற அடுத்த வாரம் கூடுகிறது. டெல்லி கலவரம் எதிர்க்கட்சியினர் நிச்சயம் பாஜகவை கேள்வி கேட்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி