26/11 மும்பை தாக்குதலில் உயிர் தப்பியதப்பிய யூத சிறுவன் எங்கே?

26/11 மும்பை தாக்குதல் நடந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த தாக்குதலில் உயிர்தப்பிய யூத சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க் குறித்து தற்பொழுது சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

moshi1

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலில் 2 வயது குழந்தையாக தனது தாதியான இந்தியாவைச்சேர்ந்த சான்ட்ரா சாமுவேலால் காப்பற்றப்பட்டான். மோஷியின் தாயும் தந்தையும் தீவிரவாதிகளால் அன்றையதினம் சுட்டு கொல்லப்பட்டார்கள். இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்க்கும் தந்தைக்கும் இடையே அழுதுகொண்டிருந்த மோஷியை சான்ட்ரா காப்பாற்றினார்.

moshi2

தாத்தாவுடன் மோஷி (சமீபத்திய படம்)

இப்போது மோஷிக்கு 10 வயதாகிறது. தனது தாத்தா பாட்டியுடன் இஸ்ரேலில் வசிக்கிறான். எல்லா குழந்தைகள் போலவும் பள்ளிக்கு சென்றுவிட்டு வருகிறான். ஜாலியாக விளையாடுகிறான். அவன் மனதில் இரண்டு வயதில் நடந்த கோரசம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவன் தாத்தா பாட்டி அளிக்கும் பதில், இல்லை ஆனால் அவன் ஆழ்மனதில் அது பதிந்திருக்கலாம் அது வெளியில் வராமல் பார்த்துக் கொள்வதுதான் எங்கள் வேலை. ஆனால் ஆண்டுதோறும் வரும் அவனது தாய் தந்தையரின் நினைவுநாள் அதை அவனுக்கு நினைவுபடுத்தி சென்றுவிடுகிறது என்கிறார்கள்.

moshi3

சான்ட்ரா சாமுவேலுடன் மோஷி

மோஷியை வளர்க்க அவனது தாதி சான்ட்ரா சாமுவேலும் இஸ்ரேலுக்கு சென்று அவனுடன்தான் வசிக்கிறார். சான்ட்ராவின் தியாகத்தை கண்டு நெகிழ்ந்த மோஷியின் தாத்தா பாட்டி அவரையும் தங்களுடனே வைத்துக்கொண்டனர்.

மோஷி எங்களுக்கு மகனைப்போல அவளை வளர்த்து ஆளாக்குவதுதான் எங்கள் கடமை என்று அவனது தாத்தா ஷிமோன் குறிப்பிட்டார்.