தமிழகத்தில் அதிக வெப்பம் எங்கெங்கு?

தமிழகத்தில் நேற்று வெயில் கடுமயாக இருந்த்து.  வேலூர் உள்பட 9 நகரங்களில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் கொளுத்தியது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி  தெரிவித்ததாவது:-

”தமிழகத்தின் உட்பகுதியில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.  கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரப் பகுதி மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது.   வேலூர் உள்பட 9 நகரங்களில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக வேலூரில் 105.98 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.  திருத்தணி, சேலத்தில் 105.8 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 104.36, திருச்சியில் 104, தர்மபுரியில் 103.46, மதுரை விமான நிலையம் 102.56, நாமக்கல் 102.2, கோவை விமான நிலையம் 102.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.