‘மெகுல் சோக்ஷி’ எங்கே? ஆண்டிகுவா நாட்டிடம் சிபிஐ கேள்வி

மும்பை:

ந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரியான மெகுல்சோஷி ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மெகுல் சோஷி எங்குள்ளார் என்று ஆன்டிகுவா நாட்டு அதிகாரிகளிடம் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோஷியும்  ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்று விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை  விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இருவருக்கு  ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க அமலாக்கப்பிரிவு சர்வதேச போலீசான இன்டர்போலை நாடியது.

இந்த நிலையில் நிரவ் மோடி,  கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அந்நாட்டு அதிகாரிகளை நாடியுள்ள சிபிஐ, மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக இன்டர் போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சோக்ஷி மீது கருப்பணச் சட்டப்படி ஜாமின் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.