எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? மத்திய மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

மதுரை,

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கிளை மதுரை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய உத்தேசிக்கப்பட்டு என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தது. முதலில், மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என மாநில அரசு பரிந்துரைத்தது.

ஆனால், தஞ்சையில் போதிய வசதி இல்லை என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. வேறு இடங்களை பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை,ஆகிய 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது.

இதில் தஞ்சை நிராகரிக்கப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியைவிட கூடுதல் அம்சங்கள் கொண்ட பகுதியை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு  இன்று விசாரணை வந்தது. அப்போது, நீதிபதி எய்ம்ஸ் மருத்துமனை அமைய இருக்கும் இடம் குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12 க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.