Random image

உலகக்கோப்பை கால்பந்து: ‘கோல்டன் கிளவ்’ பெறப்போகும் கோல்கீப்பர் யார்?

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது  உலகக்கோப்பை (பிஃபா) கால்பந்தாட்டப் போட்டி  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  மேலும், இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் மோதுகின்றன

ஜூலை 15 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. அன்று  பிரானஸூடன் மோதப் போவது யார் என இன்று தெரிந்துவிடும். போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், இப்போது விருதுக்கான இறுதிப் பட்டியலும் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. கோல் கீப்பர்களை கெளவரவிக்கும் வகையில்  ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியில்  கோல்டன் கிளவ்  விருது அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியின் வெற்றி தோல்வியில் மிக முக்கிய பங்கு வகிப்பது கோல் கீப்பர்கள்தான். ஆகவே, கோல்டன் கிளவ் விருது முதலாவது உலகக் கோப்பை தொடரில் இருந்தே அளிக்கப்பட்டு வருகிறது.

சோவியத் யூனியனின் மறைந்த கோல் கீப்பர் லீவ் யசின் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 1994 ஆம் ஆண்டு சிறந்த கோல் கீப்பர்களுக்கான யசின் விருது அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் 2010 ஆம்  வருடம் முதல் இவ்விருது கோல்டன் கிளவ் விருதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சிறந்த கோல் கீப்பர்கள் சிறந்த வீரர்களாகவும் தேர்வு செய்ய தகுதியுடையவர்கள் என்று பிஃபா குழு முடிவு செய்தது. இதன்படி 2002 ஆம் வருடம் ஜெர்மனி அணியின் ஆலிவர் கான் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதினையும், சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் பெற்றார்.

கடந்த 2014 ஆம்  வருட உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியனான ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் ஆக செயல்பட்ட மெனுவள் நியோர் கோல்டன் கிளவ் விருதினை பெற்றார்.

இந்த வருடம் குரோஷியாவின் சுபாஸிக் அல்லது இங்கிலாந்து அணியின் பிக்கார்டு கோல்டன் கிளவ் விருதினை பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுவரை கோல்டன் கிளவ்  விருது பெற்றவர்கள்

1994; மைக்கல் பெருட்ஹொம்மே (பெல்ஜியம்)

1998; பெபியன் பார்தெஸ் (பிரான்ஸ்)

2002  ; ஆலிவர் கான் (ஜேர்மனி)

2006; கியன்லூகி புபன் (இத்தாலி)

2010  ; ஐகர் கஸில்லாஸ் (ஸ்பெயின்)

2014  ; மெனுவள் தியோர் (ஜேர்மனி)

You may have missed