ஐபிஎல் ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? – ஷேன் வார்னே கணிப்பு

துபாய்: தற்போது 13வது ஐபிஎல் தொடர் நடந்துவரும் நிலையில், மும்பை, ராஜஸ்தான், டெல்லி மற்றும் சென்னை அணிகள், ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே.

தற்போது ராஜஸ்தான் அணியின் அம்பாசிடராக உள்ள அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரில் ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு சென்ன‍ை முன்னேறுவது வழக்கமான ஒன்று. அந்த சுற்றில் சென்னை இல்லாததை நினைத்துப் பார்க்க முடியாது. ராஜஸ்தானின் சஞ்சு, ஸ்மித் மற்றும் டெவாஷியா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் அந்த அணியும் அரையிறுதிக்குச் செல்லும்.

மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்தில் உள்ள மும்பைக்கும் அரையிறுதி வாய்ப்புள்ளது. இந்த சுற்றுக்குள் நுழைவதில், நான்காவது வாய்ப்புள்ள அணியாக திகழ்வது டெல்லி.

சஞ்சு சாம்ஸன் தனது அதிரடியைத் தொடர்ந்தால், இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணியிலும் இடம்பெறலாம்” என்றுள்ளார் ஷேன் வார்னே.