டில்லி

திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஆர் காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன சொத்துக்கள் வாங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அனில அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆர் காம் என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.   இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  கடன் நிலுவைத் தொகை மற்றும்  கொள்முதல் நிலுவைத் தொகை ஆகியவற்றுக்காக இந்த நிறுவன சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.   இந்நிறுவனத்துக்கு ரூ.46000 கோடி கடன் உள்ளது.

இந்த ஏலத்துக்கான ஒப்பந்தப் புள்ளி அளிக்க இந்த மாதம் 11 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.   இந்த சொத்துக்களை அனில அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  அத்துடன் ஜியோ நிறுவனம் கடைசி தேதியை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கக் கோரியதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்த நிறுவன சொத்துக்களை வாங்க ஏர்டெல், இன்ஃப்ராடெல் உள்ளிட்ட ஆறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளன.    ஆனால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிஅளிக்கவிலை.    இந்த விலைப்புள்ளிகள் இன்று பரிசீலிக்கப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவின் படி ஆர் காம் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும்