ஹுமாயுன் இறக்கும் தருணத்தில் பாபரிடம் பசுவை மதிக்க சொன்னார் : பாஜக தலைவர்

ஜெய்ப்பூர்

ஹுமாயுன் தாம் இறக்கும் தருணத்தில் பாபரிடம் பசுவை மதிக்குமாறு சொன்னதாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி கூறி உள்ளார்.

பாஜக தலைவர்கள் தங்கள் கருத்துக்களின் மூலம் அடிக்கடி சர்ச்சையை உருவாக்கி வருவது வழக்கமாகி உள்ளது.   தற்போதுள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் புராண கால நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து கருத்துக்களை கூறி வந்துள்ளனர்.   தற்போது சரித்திர நிகழ்வையே ஒரு பாஜக தலைவர் மாற்றி உள்ளார்.

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன்லால் சைனி தனது டிவிட்டரில்,  :ஹுமாயுன் சாகும் தறுவாயில் பாபரை அழைத்து நீங்கள் இந்த நாட்டை ஆள விரும்பினால் பசுக்களையும், பிராமணர்களையும், பெண்களையும் மதிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்” என பதிந்துள்ளார்.   இது மக்களிடையே கடும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

ஹுமாயுனின் இறப்பதற்கு 25 வருடத்துக்கு முன்பே அவர் தந்தை பாபர் இறந்து விட்டார்.    அதனால் மக்கள் ஹுமாயுன் எதற்கு தனது தந்தை பாபரின் ஆவியிடம் இவ்வாறு கூறினார் என அதிசயித்து வருகின்றனர்.    அல்லது பாபரின் மறுபிறவியிடம் இவ்வாறு சொன்னாரா எனவும் குழம்பி உள்ளனர்.