டெல்லி:

மோடி அரசு காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, கச்சா எண்ணை மீது கவனம் செலுத்தி ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்துங்கள் என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

கச்சா எண்ணை விலை 35 சதவிகிதம் வரை குறைந்துள்ள நிலையில், அதில் கவனம் செலுத்தினால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 என மக்களுக்கு வழங்க முடியும், இதில் கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் வகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அங்கு கமல்நாத் ஆட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.

இந்த நிலையில், பாஜக அரசு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, நாட்டின் பொருளாதார ஸ்தம்பிக்கை அகற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி காட்டமாக டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அவரது பதிவில், ”இந்தியப் பிரதமரே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கலைப்பதில் நீங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததைக் கவனிக்காமல் போயிருப்பீர்கள். கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை இந்தியர்களுக்கு நீங்கள் அளிப்பீர்களா?

1 லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிப்பீர்களா? இது நிச்சயம் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்” என்று  காட்டமாக பதிவிட்டு உள்ளார்.