” விரைவில் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் வெளியேற உள்ளார் ”- டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக உள்ள டான் மெக்கன் தனது பதவியில் இருந்து விடைப்பற உள்ளார் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மெக்கனின் செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்ட நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

mcgahn

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்பிற்கும், வெள்ளை மாளிகையின் ஆலோசகராகவும் டான் மெக்கன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது பதவில் இருந்து விடைப்பெற இருக்கிறார் என டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டான் மெக்கன் கூடிய விரைவில் விடைபெற்று உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற உள்ளார். டான் மெக்கனுடன் நான் நீண்ட காலம் பணியாற்றி இருக்கிறே. அவரது பணிகளை உளமாறப் பாராட்டுகிறேன் “ என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் நிர்வாகப் பணிகளில் ஆலோசகர் மாற்றப்படுவது இயல்பானது என்றாலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நடந்து வருகிறது. இதன் காரணமாக மெக்கனின் செயல்பாடு அதிருப்தி அளிக்கு வகையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் செய்திகள் வெளியானது. இதையடுத்து மெக்கனை வெளியேற்றும் முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரங்களில் டான் மெக்கன் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.