பெங்களூரு : மிருகக்காட்சி ஊழியரை புலிகள் அடித்து கொன்றன

பெங்களூரு

ன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவரி இரண்டு வெள்ளைப் புலிகள் அடித்துக் கொன்றுள்ளன.

பெங்களூருக்கு மிக அருகில் உள்ள பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலையில் ஒரு வாரம் முன்பு 41 வயதான அஞ்சி என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.   அவருக்கு மிருகங்களுக்கு தீனி வைக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது.   அவ்வாறு மிருகங்களுக்கு தீனி அளித்து வரும்போது ஒரு கூண்டுக்குள் தீவனம் வைப்பதும் அந்த நேரத்தில் மிருகங்களை வெளியில் அனுப்பி அந்தக் கூண்டின் பகுதியை மூடி வைப்பதும் வழக்கம்.

சம்பவத்தன்று அஞ்சி அதுபோல புலிகளின் கூண்டுக்குள் தீவனம் வைத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் அந்தக் கூண்டில் மிருகங்கள் உள்ள கதவு திறந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.   அதனால் கூண்டுக்குள் புகுந்த இரண்டு வெள்ளைப் புலிக்குட்டிகள் அவரை சூழ்ந்துக் கொண்டு தாக்கத் தொடங்கின.    அவர் தப்பிக்க முயன்றும் முடியவில்லை.   அவரை அந்த இரு புலிக்குட்டிகளும் கொன்று விட்டன.   இது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   போலிசார் இது இயற்கைக்குப் புறம்பான மரணம் என்னும் பிரிவின் கிழ்ழ் வழக்கு பதிந்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மிருகக்காட்சி சாலையில் வேறு ஒரு ஊழியர் சிங்கத்தினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்ததும்,  ஐந்து வங்காளப் புலிகள் சேர்ந்து ஒரு வெள்ளைப் புலியை அடித்துக் கொன்றதும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.