பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு வாஷ் அவுட்தான்: மைக்கேல் வான்

லண்டன்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆவது உறுதி என்றுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

சொந்தப் பிரச்சினைகள் காரணமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றதால், அவர் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், பேசியுள்ள மைக்கேல் வான், “பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணி 3-0 என்று ஒயிட்வாஷ் ஆவது உறுதி. பாகிஸ்தானை ஒப்பிடுகையில் இங்கிலாந்து அணி வலுவானது.

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஒரு வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் பெற்றிருந்தாலும், கேப்டனாக அனுபவம் இல்லாதவர். முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு நெருங்கி வந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் அடுத்தடுத்து ஆட மாட்டார் என்று நினைக்கிறேன். எனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமென்றே கருதுகிறேன். மேலும், மார்க் உட் வர வாய்ப்புள்ளது” என்றார் அவர்.