இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

“உடல்தானம்” என்கிற வார்த்தை கடந்த பல வருடங்களாகவே அடிக்கடி நாம் கேள்விப்படுவதுதான்.

“மருத்துவ மாணவர்களின் கல்விக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காததால் மாணவர்களுக்கு உடற்கூறியல் குறித்த பாடம் எடுக்க சிரமமாக இருக்கிறது” என்று மருத்துவ பேராசிரியர்கள் கூறுவதை பத்திரிகை பேட்டிகளில் படித்திருப்போம்.

ஞாநி

ஆனாலும் உடல் தானம் என்பது மிகப்பெரிய விசயமாகவே இருக்கிறது. இறந்தவரைக் கூட, உயிருள்ளவர் போல் எண்ணும் நமது சென்ட்டிமெண்ட்தான் இதற்கு முக்கிய காரணம்.

அதனால்தான், மறைந்த நபர், உடல் தானம் செய்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் ஒத்துழைக்காததால் தானம் செய்யப்படுவதில்லை. இப்படி நிறைய நடக்கிறது.

இன்குலாப்

நேற்று நள்ளிரவு மறைந்த பத்திரிகையாளர் ஞாநியின் உடல், இன்று மாலை நான்கு மணிக்கு தானம் செய்யப்பட இருக்கிறது.

பெரியார்தாசன்

அதே போல் சமீபத்தில் மறைந்த கவிஞர் இன்குலாப் உடலும் தானம் செய்யப்பட்டது.  அதற்கும் முன்பாக பெரியார்தாசன் விரும்பியபடி அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்தனர் அவரது குடும்பத்தினர்.

தமிழறிஞர் பெரியார்தாசன் உடலும் தானம் செய்யப்பட்டது.

 

ஜெயலட்சுமி

பக்திப்பாடல்கள் பாடி புகழ்பெற்ற சூரமங்கலம் சகோதரிகளில் ஜெயலட்சுமி உடல் தானத்துக்கு பதிவு செய்திருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது உடல் ஆய்வுக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.

ஜோதிபாசு

இதற்கு முன்பு மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் உடலும் தானம் செய்யப்பட்டதும் நடந்திருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது உடலை தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல்தானம் செய்ய பதிவது என்பது பரவாலக நடக்க வேண்டும்.

கார்ட்டூன் கேலரி